வகுப்பு 5
அலகு 1 வரலாற்றை நோக்கி
சான்றுகள்
- மனிதன் காலம் காலமாகப் பெற்ற வளர்ச்சியை அடையாளப்படுத்துவது 'வரலாறு' ஆகும்.
- வரலாற்றை எழுத தகவல் அளிக்கும் குறிப்புகளுக்கு 'வரலாற்று உறைவிடங்கள்' என்று பெயர்.
- வரலாற்றை எழுத உதவுபவைகளை 'எழுதப்பட்ட குறிப்புகள், எழுதப்படாத குறிப்புகள்' என்று பிரிக்கலாம்.
வரலாற்றைத் தேடும் போது கிடைப்பவை:-
ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்த மனிதரின்
- உணவு
- ஆடை
- வாழிடம்
- தொழில்
- ஆட்சி முறை ஆகியவை.
கற்காலம்
- எழுத்து வடிவம் உருவாவதற்கு முன் உள்ள காலம் கற்காலம் ஆகும்.
- கற்கால மனிதன் பயன்படுத்திய பொருட்களின் எச்சங்கள் வழியே அன்றைய மனிதனைப் பற்றி அறிய முடியும்.
எடுத்துக்காட்டு :
- கற்காலத்தில் மனிதன் பயன்படுத்திய கற்கருவிகளின் எச்சங்கள்
- குகைகளில் இருக்கும் ஓவியங்கள்.
வரலாற்றுக்காலம்
- எழுதப்பட்ட ஆவணங்கள் உள்ள காலம் வரலாற்றுக் காலம் என்று அழைக்கப்படுகிறது.
வரலாற்றுக் காலத்தை எழுத உதவுபவைகள் :
- புத்தகங்கள்
- பழங்கால நாணயங்கள்
- ஓலைச்சுவடிகள்
- கல்வெட்டுகள்
அருங்காட்சியகம்
- பழங்காலத்தில் மனிதன் பயன்படுத்திய பொருட்களையும் அவற்றின் எச்சங்களையும் பாதுகாக்கும் இடம் அருங்காட்சியகம் ஆகும்.
- பழங்கால மனிதரின் வாழ்க்கையைப் பற்றிய தகவல் அளிப்பதால் அவற்றைப் பாதுகாக்கின்றனர்.
அருங்காட்சியகத்தால் பாதுக்காக்கப்படுபவை :
- கோட்டைகள்
- கட்டிடங்கள்
- நினைவுத்தூண்கள் போன்றவை
- பாலக்காடு கோட்டை 200 ஆண்டுகள் பழமையானது.
விசாரித்தலும் கண்டிபிடித்தலும்
பழங்காலத்தில் கேரளத்தில் கடைபிடிக்கப்பட்ட அடக்கம் செய்யும் முறையோடு தொடர்புடைய
நினைவுச்சின்னங்கள்
காலம் கணக்கிடல்
- இன்று, உலகத்தில் பொதுவாகக் காலத்தைக் கணக்கிடப் பின்பற்றுவது கிறிஸ்து வருடமாகும். இயேசு கிறிஸ்து பிறந்ததன் அடிப்படையில் காலத்தை இரண்டாகப் பிரித்துள்ளனர்.
- கி.மு - கிறிஸ்து பிறப்பிற்கு முன்னர் ( B.C - Before Christ )
- கி.பி - கிறிஸ்து பிறந்த பின்னர் ( A.D - Anno Domini )
- தற்போது காலக் கணக்கிடல் CE ( Commom Era ) என்றும் BCE ( Before Common Era ) என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
- AD என்பது இலத்தீன் மொழிச்சொல். இதன் பொருள் In the year of our Lord’s birth ( இயேசு கிறிஸ்து பிறந்த வருடத்தில் ) என்பதாகும்.
- இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த ஆண்டு கி.பி 1947.
- கேரள மாநிலம் உருவான ஆண்டு கி.பி 1956.
- காந்திஜி உப்புச்சத்தியாகிரகம் நடத்திய ஆண்டு கி.பி 1930.
நாள்காட்டி
நாள்காட்டியில் காணப்படும் வருடங்கள்
- கிறிஸ்து வருடம்
- கொல்லம் வருடம்
- ஹிஜ்ரி வருடம்
- சக வருடம்
- திருவள்ளுவர் வருடம்
நூற்றாண்டைக் கணக்கிடுதல்
- ஒரு நூற்றாண்டு என்பது நூறு(100) வருடங்களைக் கொண்டதாகும்.
உதாரணம் :-
- கி.பி 1 முதல் கி.பி 100 வரை ஒன்றாம் நூற்றாண்டு ஆகும்.
- கி.பி 1901 முதல் கி.பி 2000 வரை இருபதாம் நூற்றாண்டு ஆகும்.
நன்றி - SCERT , Kerala.