அரசு உயர்நிலைப்பள்ளி,கூவக்காடு
கூவக்காடு,கொல்லம்.
ஹைக்கூ கவிதைகள்
பள்ளிக்கூடம்
பல விரியாத மொட்டுகளையும்
விரிய வைக்க உருவாக்கப்பட்டது
ரம்யா.
பள்ளிக்கூடம்
குழந்தைகள் மகிழும்
ஒரு பூங்கா
அந்த குழந்தை பூங்கா
இதுவே பள்ளிக்கூடம்
ரெஷ்மி.
பெண்
மென்மையான மனம் கொண்டு
பல சோதனைகளையும்
சாதனையாக மாற்றுகின்றவள்.
ரம்யா.
தாயின் கருவறை
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
நாம் இருந்த இடத்திற்கு
வாடகைக் கொடுக்கமுடியாத இடம்...
அம்மா
அடுத்த ஜென்மத்தில் நான்செருப்பாக
பிறக்க ஆசைப்படுகிறேன்
என்னை சுமந்த அம்மாவை-நான்
ஒருமுறை சுமப்பதற்கு
ஆசிரியர்
அருவிகள் போல அன்பைக் கொடுத்தார்
அம்மா என்ற இடத்தைக் கொடுத்தார்..
நதிகள் போல நட்பைக் கொடுத்தார்
நல்ல பழக்கவழக்கங்களை கற்று தந்தார்..
உயிர் எழுத்து கற்றுத்தந்தார்
உண்மையாக இருக்கச் சொன்னார்..
கையைப் பிடித்து எழுத வைத்தார்
கடுமையாக உழைக்கச் சொன்னார்...
நன்றாக படிக்கச் சொன்னார்
நேர்மையாக வாழச் சொன்னார்....